விடியல் ஆட்சியில் இதுவரை மதுரைக்கு என்ன செஞ்சீங்க முதல்வரே?... செல்லூர் ராஜூ காட்டம்!

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் தளத்தில், “மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கான 615.92 ஏக்கர் நிலத்தில், இன்னும் 20 ஏக்கர் நிலம் பல மாதங்களாக ஒதுக்கப்படாமல் உள்ளது. இனியாவது இந்த நிலத்தை ஒதுக்கி பணிகளை தொடங்குவீர்களா? அதிமுக ஆட்சியில் தொடங்கிய ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் இன்னும் முழுமையடையவில்லை. பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டிய வணிக வளாகம் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 57 கோடி வருவாய் இழப்பு. 2022-ஆம் ஆண்டு அறிவித்த 280 கோடி மதிப்பிலான ஐ.டி. பார்க் திட்டம் எங்கே? இதற்குப் பொறுப்பான தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மதுரையையே சேர்ந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். இப்போதாவது திட்டத்தை செயலாக்குவீர்களா?

அதிமுக ஆட்சியில் தொடங்கிய முல்லைப்பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம், திமுக ஆட்சியில் திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுகிறது. திட்ட மதிப்பு ரூ.1,296 கோடியில் இருந்து 1,685 கோடியாக உயர்ந்துள்ளது. இது தான் உங்கள் "விடியல்" ஆட்சியின் விளைவு என்றால், மக்கள் ஏற்க முடியுமா? மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவமனை கட்டுமானம் இன்னும் முடியவில்லை. ஆனால், அதைச் சுற்றியுள்ள நிலங்களில் திமுகவினரின் 'ரியல் எஸ்டேட்' வளர்ச்சி மட்டும் கொடிக்கட்டி பறக்கிறது நடவடிக்கை எடுப்பீர்களா? திட்டமிடல் இல்லாமலே அமைக்கப்பட்ட மேம்பாலன்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளன. ஆன்மீகமும் சுற்றுலா நகரமாக இருக்க வேண்டிய மதுரையின் வளர்ச்சிக்கு இவையெல்லாம் மிகப்பெரிய தடையாக உள்ளன. இதுதான் உங்கள் திட்டமிடலின் சிறப்பா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
