சீமான் தொகுதி எது?! எகிறும் எதிர்பார்ப்பு... இன்று ஒரே மேடையில் 234 வேட்பாளர்களையும் அறிவிக்கிறார் சீமான்!

 
சீமான்

இன்று திருச்சியில் நடைபெற உள்ள மாநாட்டு மேடையில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிமுகப்படுத்த இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைக்கட்ட தொடங்கியுள்ள நிலையில், பிற அரசியல் கட்சிகள் எல்லாம் கூட்டணி பேரத்தில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினர், களத்தில் இறங்கி தேர்தல் பணிகளை வேகமாக செய்து வருகின்றனர்.

நாம்

இன்று திருச்சியில் நடைபெற உள்ள மிகப் பெரிய மாநாட்டில், 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் பட்டியலை சீமான் அறிவிக்க உள்ளார்.

வழக்கம் போல் இந்த பட்டியலில் 117 ஆண் மற்றும் 117 பெண் வேட்பாளர்களாக பரபரப்பு செய்யப்பட்டு தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டமே 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் சிக்னலைக் கொடுக்கும், சமத்துவத்தின் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

நாம்

அதே நேரத்தில், சீமானின் இந்நடவடிக்கை தமிழகத்தில் அரசியல் சூழலை மேலும் சூடாக்கிவிடும், குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் வேட்பாளர் தேர்வு வியூகங்களில் பொது அரசியல் கட்சிகளிடையே போட்டி தீவிரமாக உள்ளதாக வட்டார விவாதங்களில் கூறப்படுகிறது.இதில் சீமான் போட்டியிடப் போகும் தொகுதி எது என்பது அரசியல் கட்சியினருக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களும் ஆவலுடன் அறிந்துக் கொள்ள காத்திருக்கிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!