என்னங்கடா இது?! ஹெல்மெட் போட்டாலும் அபராதமா?! புதிய போக்குவரத்து விதிகள் அமல்!!

 
ஹெல்மெட்

நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவது போல் விபத்துக்களும் பெருகி வருகின்றன. விபத்துக்களை தடுக்கவும், விபத்தில்லா பயணத்தை உறுதி செய்யவும் மத்திய அரசு போக்குவரத்து விதிகளை கடுமையாக்கியுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகளை பொறுத்தவரை ஹெல்மெட் போட்டு பயணிக்க வேண்டும். ஓட்டுபவர் மட்டுமல்ல பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் ஹெல்மெட் போட வேண்டியது அவசியம்.

ஹெல்மெட்

ஹெல்மெட் போடாதவர்களுக்கு ரூ2000 அபராதத் தொகை வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஹெல்மெட் போட்டால் மட்டும் போதாது, அதில் இருக்கும் ஸ்ட்ராப்பை சரியாக மாட்டிக் கொள்ள வேண்டியதும் அவசியமே.இது இல்லை என்றாலும் போக்குவரத்து காவலர்கள் ரூ1000 அபராதம் விதிக்கலாம். இதற்காக புது போக்குவரத்து விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.  மேலும் ஹெல்மெட் சரியில்லாததாக மோசமான நிலையில்  இருந்தாலோ (அ) BIS முத்திரை இன்றி இருந்தாலோ ரூ.1,000 அபராதம் செலுத்தவேண்டி வரும்.

ஹெல்மெட்


அதே போல் ஹெல்மெட் அணிந்த பிறகும் புது விதிமுறைகளை பின்பற்றவில்லை எனில் ரூ.2000 அபராதம் செலுத்தவேண்டும். நாடு முழுவதும் சாலை விபத்துகளை தடுப்பதற்கு போக்குவரத்து விதிகளை அரசு கடுமையாக்கி உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வாகனத்தில் அதிக பாரம் ஏற்றினால் ரூ.20,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web