பாமக எதிர்காலம் என்னாகும்? ராமதாஸின் "கடைசி யுத்தம்"... இன்று சேலத்தில் பொதுக்குழு கூட்டம்!

 
அன்புமணி ராமதாஸ் பாமக

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பமாக, தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான அதிகாரப் போர் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சேலத்தில் இன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கை, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனது உழைப்பில் உருவான இயக்கத்தை மீட்டெடுக்கத் தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், அன்புமணி தரப்பினர் தன்னை மிக மோசமாகச் சித்தரிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

 ராமதாஸ், அன்புமணி

அதில், "எனக்கு வயதாகிவிட்டது, புத்தி பேதலித்துவிட்டது, சுயநினைவு இன்றிப் பேசுகிறேன்" என அன்புமணி கும்பலைச் சேர்ந்த சிலர் தன்னை அசிங்கப்படுத்துவதாகவும், அதனைத் தான் பொறுத்துக்கொள்வதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அன்புமணிக்கு எம்.பி., மத்திய அமைச்சர் என அனைத்து வாய்ப்புகளையும் தந்த போதிலும், அவர் மக்களுக்காக உழைக்கவில்லை என்றும், அவரது தலைமையால் கட்சியின் அங்கீகாரம் இன்று பறிபோகும் நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"பெற்ற தந்தைக்கே துரோகம் செய்பவர், இந்த இயக்கத்தையோ மக்களையோ எப்படிக் காப்பாற்றுவார்?" என்று நேரடியாக அன்புமணியை அவர் விமரிசித்துள்ளார். இன்று சேலத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் வெறும் கூட்டம் அல்ல, அது கட்சியின் மறுபிறப்பு என்று அவர் அறிவித்துள்ளார்.

ராமதாஸ்

வரும் தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்று, கட்சியின் சின்னத்தையும், இழந்த அங்கீகாரத்தையும் மீட்டெடுப்பதே தமது லட்சியம் என்று கூறியுள்ளார்.  "அன்புமணியுடன் இருந்து ஏமாறாதீர்கள்" என்று கூறியுள்ள அவர், லட்சக்கணக்கான தொண்டர்களின் நலனுக்காகத் தான் உருவாக்கிய கட்சியைப் பாதுகாக்கப் போவதாக உறுதி அளித்துள்ளார்.

கடந்த காலங்களில் 20 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தமிழக அரசியலில் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருந்த பாமக, தற்போது உட்கட்சிப் பூசலால் பிளவுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ராமதாஸின் இந்த அதிரடி முடிவால், கட்சி இரண்டு அணிகளாகப் பிரியும் சூழல் உருவாகியுள்ளது. இன்று சேலத்தில் கூடும் தொண்டர்களின் எண்ணிக்கையும், எடுக்கப்படும் தீர்மானங்களும் பாமக-வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!