உங்க ஊரில் எதை விதைத்தால் காசு கொட்டும்?! தமிழகம் முழுவதும் அரசு பரிந்துரை.. மானியம்.. விற்பனைக்கு உதவி!

 
மிளகு

வாடிய பயிரை கண்டபொழுதெல்லாம் வாடினேன் என்றார் வல்லளார், உழுதவன் கணக்குப் பார்த்தால் ஆழாக்கு கூட மிஞ்சாது! விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்... இப்படி பல்வேறு சொலவடைகளைக் கேள்ளிப்பட்டிருப்போம்,  அந்த வகையில் தற்பொழுது நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழ்வது விவசாயத்துறை. அந்தத் துறையை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இயற்கை வேளாண்மைக்கு உயிர் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 'தமிழ்நாடு வேளாண்மைக் கொள்கை 2023ஐ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், அதிக வாய்ப்புள்ள பயிர்கள் அதிக மாவட்டங்களில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உங்கள் மாவட்டத்தில் நீங்கள் என்ன பயிரை விளைவிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் அது உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் என்பது உண்மை!

பாரம்பரிய நெல் வகைகளை பயிரிடுவதற்கு  புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, ஈரோடு, கடலுார், தஞ்சாவூர், திருநெல்வேலி, மயிலாடுதுறை, திருவள்ளூர் ஆகிய ஊர்களை தேர்வு செய்திருக்கிறது அரசு. அதே போல பிற ஊர்களில் விவசாயம் செய்வோர் உங்கள் ஊரில் என்ன பயிர்களைப் பயிரிடலாம் என்ற பட்டியலையும் தந்த்திருக்கிறது. எந்த  ஊரில் என்ன பயிர் அமோகமாக விளையும் என்று பார்ப்போமே...

டீ எஸ்டேட் தேநீர்

கரும்பு : ஈரோடு, கடலுார், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி.

சிறுதானியங்கள் : தர்மபுரி, வேலுார், திருவண்ணாமலை, திண்டுக்கல், சேலம், மதுரை, துாத்துக்குடி, கரூர். 

பயறு வகைகள் : விழுப்புரம், சிவகங்கை, கடலுார், கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம்.

நிலக்கடலை : திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலுார், நாமக்கல், சிவகங்கை, செங்கல்பட்டு, திருப்பத்துார்.

தேங்காய் : கோவை, திருப்பூர், ஈரோடு.

மாம்பழம் : கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல்.

வாழைப்பழம் : கன்னியாகுமரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், கோவை, துாத்துக்குடி.

காஃபி : கோவை மாவட்டத்தில் ஆனைமலை சரகம், நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சரகம், திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் சரகம் மற்றும் நீலகிரி, தேனி.

பருத்தி : ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், துாத்துக்குடி, விருதுநகர், தென்காசி.

மிளகாய் : ராமநாதபுரம், சிவகங்கை, துாத்துக்குடி.

மஞ்சள் : ஈரோடு, கோவை, நாமக்கல்.

தேயிலை : நீலகிரி, கோவை மாவட்டத்தில் வால்பாறை ஆகிய ஊர்களில் மட்டுமே விளையுமாம்.

சாமந்தி

காய்கறிகள் : இன்றைய கால சூழ்நிலையில் அவரவர் மொட்டை மாடிகளிலேயே தோட்டம் அமைக்க ஆரம்பித்து விட்டனர்.  இருப்பினும் தேனி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய ஊர்களை பட்டியலில் சுட்டிக்காட்டி உள்ளது அரசு. 

வெங்காயம் : பெரம்பலுார், அரியலுார்.

மருத்துவப்பயிர்கள் : திண்டுக்கல், தேனி.

மிளகு : கோவை, கன்னியாகுமரி, நாமக்கல், திருவண்ணாமலை.

முருங்கைக்காய் : ஈரோடு, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி.
நறுமணப் பொருட்கள் : கன்னியாகுமரி, நாமக்கல், ஈரோடு, தேனி, திண்டுக்கல், கோவை.

இவ்வாறு வைகைப்படுத்தி இருக்கு அரசாங்கம். இந்த பட்டியலில் கண்டுள்ள ஊர்களில் பயிர்களைப் பயிரிட்டால் பலன் பெறலாம் என்பதோடு அரசு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை அதாவது மண் வள பரிசோதனை, விளைவித்த பயிருக்கு நல்ல விலை போன்றவற்றை வழங்கலாம் என தெரிகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web