வாட்ஸ்அப் வெப் 6 மணி நேரத்தில் தானாக Log out... பயனர்கள் அதிர்ச்சி!

 
whatsapp

 

இந்திய அரசு ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் புதிய விதிகளை அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் மோசடிகளை தடுக்க வாட்ஸ்அப் வெப்/டெஸ்க்டாப் பதிப்பில் 6 மணி நேரம் பயன்பாட்டுக்குப் பிறகு தானாக Log out செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் WhatsApp Web-ஐ பயன்படுத்த QR-கொடையை ஸ்கேன் செய்து மீண்டும் உள்நுழைய வேண்டும்.

The issue only appeared to be happening on the web version of WhatsApp. (Representational image)

இந்த கட்டுப்பாடு மார்ச் 1, 2026 முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இது DoT (Department of Telecommunications) வெளியிட்ட SIM binding விதிகளில் ஒன்றாகும். கடந்த நவம்பர் 2025-இல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது; அதன் உட்பிரிவு பிப்ரவரி 28, 2026 வரை இணக்கமளிக்க காலையிடப்பட்டது. அரசு எந்த நீட்டிப்பும் வழங்கப்படாது என்று உறுதிப்படுத்தியுள்ளது.இந்த புதிய விதி மொபைல் App-இல் உள்ள நேரடி இணைப்பை பாதிப்பதில்லை. WhatsApp Web/டெஸ்க்டாப்/லேப்டாப் போன்ற கூடுதல் சாதனங்களில் மட்டுமே 6 மணி நேரம் தானாக Log out அமலாகும். குறிப்பாக டெலிகிராம் மற்றும் பிற OTT செயலிகளுக்கும் இதே விதி பொருந்தும் என அரசு கூறியுள்ளது.

அதற்கு மேலாக, SIM கார்டு போனில் இல்லாவிட்டால் சில சமயங்களில் இணைய சேவை பாதிக்கப்படும் அபாயம் இருக்கலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தினாலும், சைபர் மோசடி மற்றும் பாதுகாப்பு அபாயங்களை குறைக்க இது அவசியம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!