ஷாக்... வாட்ஸ்ஆப், டெலிகிராம் நீக்கம்... ரஷியாவில் பயனர்கள் கடும் அவதி!
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ரஷிய அரசு வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் செயலிகளை நீக்கியுள்ளது. இணைய தளங்களில் வெளிநாட்டு செயலிகளின் ஆதிக்கத்தை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அரசின் இந்த திடீர் முடிவு உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது. தகவல் பரிமாற்றத்தில் பெரும் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணைய பயன்பாட்டை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ரஷியா பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த செயலிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கோடிக்கணக்கான பயனர்கள் மாற்று செயலிகளை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்பு சேவைகளில் சிரமம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த முடிவால் ரஷியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் உள்ள பயனர்களுக்கும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 100 கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. உள்நாட்டு செயலிகளுக்கு ஆதரவு அதிகரிக்கும் என்றாலும், பயனர்கள் எதிர்வினை எப்படி இருக்கும் என்பது கேள்வியாக உள்ளது. ரஷியாவின் இந்த நடவடிக்கை டிஜிட்டல் உலகில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
