வாட்ஸ் ஆப் பாதுகாப்பு விவகாரம் மீதான சர்ச்சை… எலான் மஸ்க் குற்றச்சாட்டு!

 
elon musk
 

உலகளவில் பெரும்பாலானோர் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ் ஆப் செயலியைப் பயன்படுத்துகின்றனர். பல மாற்று செயலிகள் இருந்தாலும், வாட்ஸ் ஆப் முன்னணி இடத்தை பேணிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, சமீபத்தில் வாட்ஸ் ஆப் முன்னாள் ஒப்பந்ததாரர்கள் கூறியதன் படி, வாட்ஸ் ஆப் பயனர்களின் உரையாடல்களை நிறுவனம் ஊழியர்களால் படிக்க முடியும் என்பதன் விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை மேற்கோள் காட்டி எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்க், “வாட்ஸ் ஆப் அரட்டைகள் உண்மையிலேயே தனிப்பட்டவையா? என்று அமெரிக்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வாட்ஸ் ஆப்பிற்கு பதிலாக எக்ஸ் சாட்-ஐ பயனர்கள் பயன்படுத்தலாம்” என தெரிவித்துள்ளார். இதன் மூலம், தனது எக்ஸ் சாட் விளம்பரத்திற்கு வாட்ஸ் ஆப் குறித்த குற்றச்சாட்டை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வாட்ஸ் ஆப் நிறுவனம், “எக்ஸ் சாட் எதிர்காலத்தில் பாதுகாப்பான உடனடி தகவல் பரிமாற்ற பயன்பாடாக மாறலாம். இருப்பினும், எலான் மற்றும் அவரது குழு வாட்ஸ் ஆப் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை செய்து பயனர்களை மாற்ற முயற்சிக்கின்றனர். பயனர்கள் எந்த செயலியையும் தேர்வு செய்ய சுதந்திரம் உள்ளனர். வாட்ஸ் ஆப் தொடர்பான செய்திகள் பகிர்வதால் உங்களது பாதுகாப்பை பாதிக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!