என்னாகுமோ? ஏதாகுமோ? இன்று டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் தவெக ஆதவ், புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆஜராக உத்தரவு!
கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் இறுதி கட்ட விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இன்று டிசம்பர் 29, திங்கட்கிழமை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் ஆஜராகுமாறு தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகளுக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி புஸ்சி ஆனந்த் (மாநில பொதுச்செயலாளர்), ஆதவ் அர்ஜுனா (நிர்வாகி), நிர்மல்குமார் (இணை செயலாளர்), மதியழகன் (கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகியோர் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர்.

த.வெ.க. நிர்வாகிகளுடன் சேர்த்து, பாதுகாப்புப் பணியில் இருந்த மற்றும் விசாரணையை முன்னெடுத்த கரூர் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளுக்கும் சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது:
ஜோஷ் தங்கையா (மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு), பிரேமானந்தன் (கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு) மற்றும் பிற அதிகாரிகள் இன்று டெல்லியில் தங்களது தரப்பு விளக்கங்களை அளிக்க உள்ளனர்.

செப்டம்பர் 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த த.வெ.க. பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர்; 110 பேர் காயமடைந்தனர். இதுவரை சி.பி.ஐ. அதிகாரிகள் இறந்தவர்களின் குடும்பத்தினர், மருத்துவர்கள் மற்றும் சாட்சிகள் என 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். தற்போது முக்கிய நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் டெல்லியில் ஆஜராவதால், இந்த வழக்கின் இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விசாரணை முடிவில், கூட்ட ஏற்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடுகள் அல்லது பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து சி.பி.ஐ. தனது இறுதி முடிவை அறிவிக்கும் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
