'வாட் ப்ரோ... இது ரொம்ப தப்பு ப்ரோ' ஈரோடு முழுக்க விஜய்க்கு எதிராக போஸ்டர் யுத்தம்!

 
விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் பிரம்மாண்டமான மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு தொண்டர்கள் மத்தியில் பேசவிருக்கிறார். இதற்காக நேற்று இரவிலிருந்தே அந்த இடமே போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, காலையிலேயே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவியத் தொடங்கிவிட்டனர். ஆனால், கோலாகலமாகத் தொடங்க வேண்டிய இந்த விழாவில் திடீரென ஒட்டப்பட்ட சில போஸ்டர்கள் இப்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

விஜய்

விஜய்யின் ஈரோடு வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மர்ம நபர்கள் போஸ்டர்களை ஒட்டி அதிரடி காட்டியுள்ளனர். அந்தப் போஸ்டரில் இருக்கும் வாசகங்கள் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் செம ஹாட்! 'ஈரோடு வரைக்கும் வந்தீங்களே, கரூருக்குப் போக மாட்டீங்களா? இங்க பக்கத்தில் இருக்கிற கரூருக்குப் போகத் தெரியவில்லை, ஆனால் ஆடியோ லாஞ்சுக்கு மட்டும் மலேசியா போறீங்களா?' என்று கேட்டுவிட்டு, கடைசியாக 'WHAT BRO IT'S VERY WRONG BRO' என்ற வாசகத்தைச் சேர்த்து விஜய்யைப் பங்கம் செய்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, மற்றொரு போஸ்டரில் 'விஜய் பரிதாபங்கள்' என்று தலைப்பிட்டு ஒரு பெரிய பட்டியலே போட்டுள்ளனர். அதில் விஜய் எதற்கெல்லாம் வருகிறார், எதற்கெல்லாம் வரமாட்டார் என்று கிண்டலடித்துள்ளனர். 'ஜனநாயகன் டப்பிங், ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா செல்வது, ஆடம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது' போன்றவற்றிற்கு 'பிரசன்ட்' போடும் விஜய், 'மக்கள் பிரச்சினைக்குக் குரல் கொடுப்பது, மக்களைச் சந்திக்க கரூருக்குச் செல்வது, கட்சி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது' போன்ற விஷயங்களில் மட்டும் 'ஆப்சென்ட்' ஆகிவிடுகிறார் என்று அந்தப் போஸ்டரில் விளாசித் தள்ளியுள்ளனர்.

விஜய்

ஈரோட்டில் ஒரு பக்கம் உற்சாகமாக விழா ஏற்பாடுகள் நடந்தாலும், இந்த எதிர்மறை போஸ்டர்கள் த.வெ.க தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விஜய் இதற்கு மேடையில் பதிலடி கொடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!