என்ன கொடுமை சரவணா..? இந்த 5 நாடுகளில் வேலண்டைன்ஸ் டே கொண்டாடத் தடை!

 
டெடி

இன்று பிப்ரவரி 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகின்ற நிலையில், இந்த குறிப்பிட்ட 5 நாடுகளில் காதலர் தினத்தை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை  மீறிக் காதலர் தினத்தைக் கொண்டாடுபவர்களுக்கு கடுமையான தண்டணை உண்டு என்பது கூடுதல் தகவல்.

காதலர் தினத்தில், காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தி கொள்வர். குறிப்பிட்ட இந்த 5 நாடுகளில் மட்டும் காதலர் தினத்தை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணமும் உண்டு.  காதலர் தினம்
மலேசியா: மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு என்பதால்  காதலர் தினம் கொண்டாட இங்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

சவுதி அரேபியா:  சவூதி அரேபியாவில்  காதலர் தினத்தை கொண்டாடினால் கைது செய்யப்படுவார்கள். இதனால் இளைஞர்கள் மிக மோசமாகி விடுகின்றனர் என்ற நம்பிக்கை இந்நாட்டில் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.   

ஈரான்: ஈரானில் 2010ற்கு பிறகு காதலர் தினத்தை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அரசு இதை தார்மீக சீரழிவு விழாவாக அறிவித்துள்ளது. அத்துடன்   காதலர் தினம் தொடர்பான பரிசுகள் மற்றும் பொருட்களை கூட விற்பனை செய்வதும் தண்டணைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.  

பாகிஸ்தான்: பாகிஸ்தானிலும் இஸ்லாமிய கருத்துக்கு எதிராக   காதலர் தினத்தை அறிவித்துள்ளது. இதனையடுத்து  காதலர் தினம் பாகிஸ்தானில் எங்கும் கொண்டாடப்படுவதில்லை. 

  காதலர் தினம்
உஸ்பெகிஸ்தான்: உஸ்பெகிஸ்தானில் பாபரின் பிறந்தநாளை இன்று பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடுகிறார்கள். இதன் அடிப்படையில் 2012க்குப் பிறகு காதலர் தினம் தடை செய்யப்பட்டுள்ளது. உஸ்பெஸ்கிஸ்தான் பொதுமக்கள்  பாபரை தங்கள் ஹீரோவாகக் கருதுகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!