இனி வாட்ஸ்அப் பயன்படுத்த கட்டணம்... பயனர்கள் அதிர்ச்சி!

 
வாட்ஸ் அப்

உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் செல்போனில் தவிர்க்க முடியாத செயலியாக இது மாறியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 3 பில்லியன் பேர் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் குறுஞ்செய்தி அனுப்ப மட்டும் வந்த வாட்ஸ்அப், பின்னர் புகைப்படம், வீடியோ, கோப்பு பகிர்வு, குழு அரட்டை, ஸ்டேட்டஸ் என பல வசதிகளை அறிமுகப்படுத்தியது. இதனால் பல போட்டி செயலிகள் வந்தாலும் வாட்ஸ்அப் தனி இடத்தை தக்கவைத்துள்ளது. தற்போது வருவாயை அதிகரிக்க மெட்டா நிறுவனம் விளம்பரங்களை கொண்டு வந்துள்ளது.

இதன்படி, ஸ்டேட்டஸ்களுக்கு இடையே விளம்பரங்கள் தோன்றி பயனர்களுக்கு இடையூறாக உள்ளது. இதனை தவிர்க்க விளம்பரம் இல்லாத கட்டண சேவையை அறிமுகம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ஐரோப்பிய நாடுகளில் மாதம் சுமார் €4, அதாவது ரூ.433 கட்டணத்தில் இந்த வசதி தொடங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!