"அதிமுக ஆட்சி வந்ததும் பொங்கலுக்கு ₹5,000!" - ராஜேந்திர பாலாஜி முழக்கம்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, 2026 தேர்தலை மையமாக வைத்துப் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகை குறித்துப் பேசிய ராஜேந்திர பாலாஜி, "பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதன் அழுத்தத்தினால்தான் இப்போது திமுக அரசு 3,000 ரூபாயை அறிவித்துள்ளது. ஆனால், 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் பொங்கலுக்கு 5,000 ரூபாய் வழங்கப்படும்."

"நாங்கள் தான் புதிய வரலாறு படைக்கப் போகிறோம், நாங்கள் தான் திமுகவைத் தோற்கடிக்கப் போகிறோம் என்று சிலர் பேசி வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த பலம் இருக்கிறதா?"
"பூத் கமிட்டி (வாக்குச்சாவடி முகவர்கள்) கூட இல்லாத சிலர் இப்போது சித்து விளையாட்டு காட்டி வருகின்றனர். ஆனால், களத்தில் உண்மையான போட்டி என்பது அதிமுகவிற்கும் திமுகவிற்கும் இடையேதான். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி என்று குறிப்பிட்ட அவர், விருதுநகர் மாவட்டத்தின் 7 தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெறும் என்றார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக 100 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பொதுச்செயலாளர் பழனிசாமி அவர்கள் வெற்றிக் கூட்டணியை அமைப்பார். அதில் எந்த ஐயமும் வேண்டாம். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்திருப்பதே கட்சியின் செல்வாக்கிற்குச் சான்று என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
