விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது? ! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

 
விடுமுறை

2023 -24ம் ஆண்டுக்கான கல்வியாண்டுக்கான கடைசி பணி நாள் இன்று. இன்றுடன் 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் நிறைவு பெறுகின்றன. நாளை முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் நிலையில் மாணவர்கள் உற்சாகத்துடன் இன்று பள்ளி சென்றுள்ளனர். இந்நிலையில் அடுத்த கல்வியாண்டு எப்போது தொடங்கும்? பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விடுமுறை

அதில் நாளை முதல் 1-9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்து உள்ளது. இந் நிலையில், கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வி  அமைச்சர் அறிவித்து உள்ளார்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 3ம் தேதியும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 20ம் தேதியும் நிறைவடைந்தன.அதனைத் தொடர்ந்து, 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களின் இறுதித் தேர்வுகளும் ஏப்ரல் 28ம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

விடுமுறை

எனவே, நாளையோடு தேர்வுகள் முடிவடைந்து அனைவருக்கும் கோடை விடுமுறை தொடங்குகிறது.கொரோனா பரவல் மற்றும் கொளுத்திய கோடை வெயில் காரணமாக  1 முதல் 9ம் வகுப்பு  மாணவர்களுக்கான இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியது. தேர்வுகளை ஏப்ரல் 17ம் தேதி என மாற்றி முன்கூட்டியே நடத்த திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.
 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web