மனைவிக்கு டிரைவிங் கற்றுக்கொடுத்த போது விபரீதம்... தெப்பக்குளத்தில் பாய்ந்த கார்!

 
தெப்பக்குளம் குளம் கார் டிரைவிங்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லல் பகுதியில், மனைவிக்குக் கார் ஓட்டக் கற்றுக் கொடுத்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து தெப்பக்குளத்திற்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கல்லல் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், தங்களது குழந்தைகளை அருகில் உள்ள தனியார் பள்ளியில் விட்டுவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, மனைவி தனது கணவரிடம் தனக்குக் கார் ஓட்டக் கற்றுத் தருமாறு கேட்டுள்ளார். மனைவியின் விருப்பத்திற்கு இணங்க, கல்லல் பகுதியில் உள்ள தெப்பக்குளம் அருகே கணவர் அவருக்குப் பயிற்சி அளித்துள்ளார்.

நீரில் மூழ்கி

கார் ஓட்டிக் கொண்டிருந்த போது, திடீரென பிரேக் பிடிப்பதற்குப் பதிலாக ஆக்ஸிலேட்டரை மனைவி வேகமாக மிதித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கார் நிலைதடுமாறி, தெப்பக்குளத்தின் படித்துறை வழியாகப் பாய்ந்து தண்ணீருக்குள் விழுந்தது. அந்தக் குளத்தில் அதிகளவு தண்ணீர் இருந்ததால், கார் மெதுவாக நீரில் மூழ்கத் தொடங்கியது.

கார் முழுமையாக மூழ்குவதற்குள், துரிதமாகச் செயல்பட்ட கணவன் மற்றும் மனைவி இருவரும் காரின் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே குதித்தனர். இதனால் இருவரும் காயமின்றிப் உயிர் தப்பினர். அவர்கள் வெளியேறிய சிறிது நேரத்திலேயே கார் மிதந்தபடி குளத்தின் நடுப்பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கியது.

நீரில் மூழ்கி பலி

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரைக்குடி தீயணைப்புத் துறையினர் மற்றும் கல்லல் காவல்துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கிரேன் உதவியுடன் குளத்திற்குள் மூழ்கிக் கிடந்த காரை மீட்டனர்.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முறையான பயிற்சிப் பள்ளிகள் மூலம் டிரைவிங் பழகுவதே பாதுகாப்பானது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!