விறகு சேகரிக்க சென்ற போது விபரீதம்.. யானை தாக்கி முதியவர் உயிரிழந்த சோகம்!

 
கணேசன்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் இன்கோ நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கணேசன் (65) மற்றும் காந்திமதி (60). சம்பவத்தன்று, பந்தலூரில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் விறகு சேகரிக்க காந்திமதி மற்றும் கணேசன் சென்றனர். அப்போது, ​​அங்கு மறைந்திருந்த காட்டு யானை இருவரையும் தாக்கியது. இருவரும் பலத்த காயமடைந்தனர்.

யானை மிதித்து பலி

இது குறித்து தகவல் கிடைத்ததும், தேவாலா வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு, பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, கணேசன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையிலும், காந்திமதி சுல்தான்பத்தேரி தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் கணேசன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேவாலா காவல் ஆய்வாளர் (பொறுப்பு) துரைப்பாண்டி மற்றும் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?