தாலி கட்டி முடிச்சதும்... திருமண கோலத்திலேயே தேர்வெழுத ஓடிச் சென்ற மணப்பெண்!

 
திருமணம் மணப்பெண் தேர்வு

கல்விக்குத் தடை ஏதுமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், தஞ்சை மாவட்டத்தில் திருமணமான கையோடு மணப்பெண் ஒருவர் தேர்வு எழுதிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருமணம் மற்றும் தேர்வு ஆகிய இரண்டுமே ஒரு பெண்ணின் வாழ்வில் முக்கியமான மைல்கற்கள். அந்த வகையில், இந்தப் பெண்ணுக்குத் திருமணமும், அவர் படித்து வரும் பி.எட். படிப்பிற்கான செமஸ்டர் தேர்வும் ஒரே நாளில் வந்துள்ளன. திருமணச் சடங்குகள் முடிந்த சில மணி நேரங்களிலேயே, தாலி கட்டி முடிச்சதும், மணப்பெண் அலங்காரத்துடன் நேராகத் தேர்வு மையத்திற்குச் சென்றுள்ளார். இந்தப் பெண்ணின் கல்வி ஆர்வத்தைப் பார்த்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், அவரைத் தேர்வு எழுத முழு மனதுடன் ஊக்குவித்து, தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

திருமண மேடையிலிருந்து தேர்வு அறைக்கு: கல்யாணக் கோலத்திலேயே பி.எட். தேர்வு எழுதிய மணப்பெண்!

பட்டுப்புடவை, நகைகள் மற்றும் முகத்தில் திருமணக் களை சொட்டச் சொட்டத் தேர்வு எழுத வந்த அந்தப் பெண்ணைக் கண்டு சக மாணவர்களும், ஆசிரியர்களும் ஆச்சரியமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணின் கல்வி ஆர்வத்தைப் பாராட்டியதோடு, அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். தேர்வு முடிந்த பின்னரே அவர் மீண்டும் திருமண இல்லத்திற்குத் திரும்பியுள்ளார்.

5வது திருமணம்

இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. "திருமணம் என்பது பெண்ணின் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி அல்ல, அது ஒரு புதிய தொடக்கம்" என்பதற்கு இவரே சாட்சி எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!