எப்பூட்றா.. அசத்தலான பீல்டிங்.. சச்சினையே மிரள வைத்த கேட்ச்! வீடியோ!

 
sachine

உள்ளூர் போட்டியாக இருந்தாலும் சரி, சர்வதேச போட்டியாக இருந்தாலும் சாதனை படைப்பதில் இந்திய வீரர்கள் தான் வல்லவராக உள்ளனர். பல சாதனைகளை அடுத்தடுத்து படைத்து இந்திய வீரர்கள் அசத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து ரோகித் சர்மாவும், விக்கெட்களை கைப்பற்றி அஸ்வினும் புதிய சாதனை படைத்துள்ளனர்.

அதேபோல், சர்வதேச போட்டிகள், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்களின் ஃபில்டிங், கேட்ச் போன்றவை ரசிகர்களை வெகுவாக கவரும். ஆனால், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நாம் சர்வதேச போட்டிகளில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு நிகழ்ந்து நடந்துள்ளது உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது.

catch

இந்த போட்டியின் வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வரை இதற்கு ரியாக்ட் செய்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட்டில், பேட்ஸ்மேன் அடித்த பந்து நேராக பவுண்டரி லைன் அருகே சென்றது. அப்போது அங்கே நின்ற ஃபீல்டர் பந்தை பிடித்த நிலையில், அவர் பேலன்ஸ் இல்லாமல் நின்றதால் லைனுக்கு அந்தப் பக்கம் செல்லும் சூழலும் உருவானது.

இதனால் கையில் இருந்த பந்தை தூக்கிப் போட்ட அந்த ஃபீல்டர், பவுண்டரி லைனுக்கு வெளியே நின்றபடி, இரு கால்களையும் மேலாக இருக்கும்படி கால்பந்து போட்டிகளில் "Bicycle Kick" அடிப்பது போல, சுற்றி சுழன்று அடித்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும் அவர் அடித்த பந்து உள்ளே வர அங்கே இருந்த மற்றொரு ஃபீல்டர் அதனை கேட்ச்சாக மாற்றி இருந்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் கூட இப்படி ஒரு சம்பவத்தை பார்த்ததில்லை என பலரும் குறிப்பிட்டு வரும் சூழலில் இந்த வீடியோ சச்சின் டெண்டுல்கர் பார்வையிலும் பட்டுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய கேப்ஷனில், "கால்பந்து விளையாட தெரிந்த ஒருவரை அழைத்து வந்தால் இப்படித்தான் நடக்கும்" என ஜாலியாக குறிப்பிட்டுள்ளார்.


 லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web