எங்கே செல்லும் இந்த பாதை... பள்ளி மாணவர்கள் பீர் குடித்து கும்மாளம்... பகீர் வீடியோ... !

 
மாணவர்கள்

பண்டிகைகள், திருவிழாக்கள், கல்யாண வீடுகள், துக்க வீடுகளில் ஒன்றாக நண்பர்கள் ஒன்று கூடி மது அருந்துவது வாடிக்கையாக இருந்தது. அந்த காலகட்டத்தில் பொதுவெளியில் மது அருந்துவது அநாகரீகமாக பார்க்கப்பட்டது. தற்போது சோஷியல் டிரிங்க்கிங் என்று மாறி மேற்கத்திய கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.  பிசினஸ் மீட்டிங்குகள் , பார்கள்  , மறைவிடங்களில் இருந்து வந்த மதுபழக்கம், பார்ட்டிகள் தற்போது பள்ளி கல்லூரி மாணவர்களிடையே புகுந்து இருப்பது பெரும் கவலையை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 



அந்த வகையில் புத்தாண்டை கொண்டாட 6 மற்றும் 7ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி கொண்டாடி இருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டம், சோடவரம் மண்டலத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் சிலர், புத்தாண்டை கொண்டாடும் வகையில்  பள்ளியின் அருகில் கட்டுமான பணி நடைபெறும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஒன்றாக  உட்கார்ந்து பீர் அருந்தியுள்ளனர்.   மாணவர்களின் பேச்சு சத்தம் கேட்டு அங்கு சென்ற  ஏர் கண்டிஷனிங் மெக்கானிக் மற்றும் பள்ளி டிரைவர்  மாணவர்கள் குடித்து கும்மாளம் போட்டதை கண்டுபிடித்தனர். 

மது


மாணவர்கள் மது அருந்துவது தொடர்பான வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், 6ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்பு படித்து வரும்  16 மாணவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது பதிவாகியிருக்கிறது.இது குறித்து  பள்ளி நிர்வாகம்  வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ இந்த செயலில் ஈடுபட்டிருப்பது சிறுவர்கள் . அதனால் அவர்களை குறித்த தகவல்களை வெளியிட முடியாது.  ஆந்திராவில்   மதுபானங்களை சட்டப்பூர்வமாக வாங்குவதற்கும் அருந்துவதற்கும்   குறைந்தது 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.   எந்த பண்டிகை வந்தாலும் பார்ட்டி என்ற பேச்சு பரவலாகி வருகிறது.  இதனால் மது அருந்துவதுதான் கொண்டாட்டம் என்ற அளவுக்கு சமூக சீரழிவு தொடங்கிவிட்டது. இதனால் மது அருந்துபவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன்  போதையில் நடக்கும் குற்றச் சம்பவங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.இது பெரும் கவலையையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web