சேலத்துக்கான பறவை எது?... பொதுமக்கள் தேர்வு செய்ய அழைப்பு!

பல்லுயிர் பாதுகாப்புக்காகவும், பறவையியல் சார்ந்த ஆர்வத்தை தூண்டுவதற்காகவும், வன உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சேலத்துக்கான பறவை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடத்தப்படுகிறது. சேலத்துக்கான பறவையை தேர்வு செய்ய குறிப்பிட்ட பறவைகளின் விவரங்களை வனத்துறை வெளியிட்டுள்ளது.
அதில் கருந்தோள் பருந்து, பவளக்கால் உள்ளான், செம்மார்பு குக்குறுவான், இந்திய பாம்புக்கழுகு, காட்டுப் பாம்புக் கழுகு, ஆற்று ஆலா, சோலை பாடி ஆகிய பறவைகளில் ஒன்றை சேலத்துக்கான பறவையாக பொதுமக்கள் தேர்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக birdofsalem.tnfdsutrula.com என்ற இணையவழி மூலம் தேர்வு செய்யலாம். மேலும், ஆட்சியர் அலுவலகம், அண்ணா பூங்கா, ஏற்காடு, குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, ஆனைவாரி முட்டல் பூங்கா, மேட்டூர் அணை பூங்கா ஆகிய இடங்களில் வைத்துள்ள பெட்டிகளில் தேர்வு செய்யும் பறவை குறித்த குறிப்புகளை வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை செலுத்தலாம். இதற்கான முடிவு வரும் மே 4ம் தேதி வெளியிடப்படும் என மாவட்ட வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!