யார் இந்த இஷா சிங்?! “கரூர் சம்பவத்தை மறக்காதீங்க...” விஜய் கூட்டத்தில் அதிரடி காட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி!

 
இஷா சிங்

புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் உறுதியுடன் செயல்பட்டு, கட்சி நிர்வாகியிடம் "காவல்துறை என்ன செய்ய வேண்டும் என நீங்கள் உத்தரவிடாதீர்கள்; கரூரில் 41 பேர் பலியான சம்பவம் நினைவில் இல்லையா?" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பி அதிரடி காட்டியவர் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இஷா சிங்

யார் இந்த ஐ.பி.எஸ். அதிகாரி இஷா சிங்?

இவர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது தாத்தா மற்றும் தந்தை ஒய்.பி. சிங் ஆகியோரும் ஐ.பி.எஸ். அதிகாரிகள். இவர் 2021ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியானார். கடந்த சில மாதங்களுக்கு முன் புதுவை காவல்துறையில் சேர்ந்து, கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டாகப் பணியாற்றினார். தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை சீனியர் போலீஸ் சூப்பிரண்டாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சுகாதாரத்துறையில் நடந்த போலி மருந்து மோசடி வழக்கில் துணிச்சலுடன் செயல்பட்டு, சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர்கள் இருவர் உட்பட ஆறு பேரை கடந்த மாதம் அதிரடியாகக் கைது செய்தார். 'நேசனல் ஸ்கூல் ஆப் லா' கல்லூரியில் சட்டம் பயின்ற இவர், ஆரம்பத்தில் மும்பை ஐகோர்ட்டில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். விஷவாயு தாக்கி உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்காக வாதாடி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் பெற்றுக் கொடுத்தவர். இவர் தற்போது ஐ.ஏ.எஸ். மற்றும் நீதிபதிக்கான தேர்வுகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

தவெக

நேற்று காலை மைதான நுழைவாயிலில் இஷா சிங் பணியில் ஈடுபட்டிருந்த போது, பாஸ் இல்லாத தொண்டர்களை உள்ளே அனுமதிக்கக் கோரி கட்சி நிர்வாகிகள் மற்றும் புஸ்சி ஆனந்த் கோரிக்கை விடுத்தனர். அப்போது, இஷா சிங் ஆவேசமடைந்து, "இங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் நாங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். கரூரில் நடந்த சம்பவம் நினைவில் இல்லையா? உங்களுக்கு அளிக்கப்பட்ட நிபந்தனைகளைச் சரியாகப் பின்பற்றுங்கள்" என்று எச்சரித்து, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!