ஆசிரியர் கண்ணன் தற்கொலைக்கு யார் காரணம்?! தவெக கண்டனம்... 'வாக்குறுதி 181' குறித்து முதல்வருக்கு அடுக்கடுக்கான கேள்விகள்!

 
ஆசிரியர் கண்ணன்

பணி நிரந்தரம் கோரிப் போராடிய ஆசிரியர் கண்ணன் உயிரிழந்த சம்பவத்திற்கு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

போராட்டம்

"ஆசிரியர் கண்ணன் மறைவுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே... யார் பொறுப்பு? நியாயமான கோரிக்கைக்காகப் போராடியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய அத்துமீறலே இந்தத் தற்கொலைக்குக் காரணமாக அமைந்துள்ளது.ஆட்சிக்கு வரும் அவசரத்தில், தேர்தல் அறிக்கையில் வரிசை எண் 181-ல் என்ன சொன்னீர்கள்? 'பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்' என்று சத்தியம் செய்தீர்களே! அதை நம்பி வாக்களித்தவர்களை இன்று நட்டாற்றில் விட்டுவிட்டீர்களா?"

ஆசிரியர்கள் போராட்டம்

"பணி நிரந்தர ஆணை வழங்குவதற்குப் பதிலாக, ஆசிரியர்களைக் குற்றவாளிகளைப் போல மண்டபத்தில் அடைத்து வைத்ததுதான் உங்கள் 'சமூக நீதியா'?" எனத் தவெக கேள்வி எழுப்பியுள்ளது. "நீங்கள் விதைத்த 'நிறைவேற்றாத வாக்குறுதிகள்' ஒவ்வொன்றும் உங்கள் ஆட்சியின் வேரை அழித்துக் கொண்டிருக்கின்றன. இனி '181' என்பது வெறும் எண் அல்ல, உங்களை ஆட்சியை விட்டு அகற்றுவதற்கான கணக்கின் தொடக்கம்" என மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!