மாதந்தோறும் யார் யாருக்கெல்லாம் ரூ1000 கிடைக்கும்?! இவங்களுக்கெல்லாம் கிடையாது!

 
குடும்பத்தலைவிகள்1000

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம்  வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என இல்லத்தரசிகள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கிடக்கின்றனர். பதவியேற்றதும் கிடைக்கும், கலைஞர் பிறந்தநாளில் தொடங்குவார், தனது பிறந்தநாளில் அறிவிப்பை வெளியிடுவார், பொங்கல் பரிசுடன் வழங்கப்படும், அண்ணா பிறந்தநாளில் அறிவிப்பு வெளியாகும் என தொடங்கி தற்போது பட்ஜெட்டில் இதற்குரிய முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இல்லத்தரசிகள்

இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் யாருக்கெல்லாம் உதவித்தொகை கிடைக்கும், யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருமானவரி செலுத்தும் பெண்கள், மத்திய மாநில அரசு பணியில் இருக்கும் பெண்களுக்கு இந்த உதவித் தொகை கிடையாது.  4 சக்கர சொகுசு வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கும் இந்த உதவித் தொகை கிடையாது.  

இல்லத்தரசிகள்
கூலி வேலை பார்க்கும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கைம்பெண்கள், அந்தியோதயா யோஜனா அட்டை வைத்திருப்பவர்கள் இவர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல் குடும்ப தலைவருக்கும் மாதம் ரூபாய் 1000 வழங்குவதற்கான தகுதி மற்றும் நிபந்தனைகளை தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web