சாம்பியன் டிராபி யாருக்கு ... இந்தியா - நியூசிலாந்து மார்ச் 9ம் தேதி பைனல்..!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு கருதி இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெற்றன. அந்த வகையில் நேற்று மார்ச் 5ம் தேதி லாகூரில் நடைபெற்ற 2 வது அரையிறுதியில் 'பி' பிரிவில் முதலிடம் பிடித்த தென் ஆப்ரிக்கா, 'ஏ' பிரிவில் இரண்டாவது இடம் பெற்ற நியூசிலாந்தை சந்தித்தது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் வில் யங் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் அதிரடியாக விளையாட துவங்கினர். இவர்களை பிரிக்க தென் ஆப்ரிக்கா செய்த அனைத்து முயற்சிகளும் வீணானது. ரச்சின் ரவீந்திரா 101 பந்தில் 108 ரன்களுக்கு அவுட்டானார். கேன் வில்லியம்சன் 94 பந்தில் 102 ரன்களுக்கு அவுட்டானார். பிறகு வந்த டேரில் மிச்சல் 49, டாம் லாதம் 4, மிச்சல் பிரேஸ்வெல் 16 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் குவித்தது. பிலிப்ஸ் 49, கேப்டன் சான்ட்னர் 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.தென் ஆப்ரிக்காவின் நிகிடி 3 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற 363 ரன்கள் என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதன் பிறகு களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. முதல் 20 ஓவர்களில் தென் ஆப்ரிக்காவுக்கே சாதகமாக இருந்தது. பிறகு, நியூசிலாந்து அணியினர் ஆதிக்கம் செலுத்தியதை அடுத்து தென் ஆப்பிரிக்க வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் டெம்பா பவுமா 56 ரன்னிலும், ரசி வான் டெர் டுசன் 69 ரன்னிலும், மார்க்ரம் 31, ஹென்ரிச் க்ளாசன் 3, வியான் முல்டர் 8, மார்கோ ஜென்சன் 3, கேசவ் மஹாராஜ்1, ரபாடா 16, ரன்னிலும் அவுட்டானார்கள். தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 50 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் வரும் 9ம் தேதி துபாயில் நடக்கும் பைனலில் இந்திய அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்கிறது. தென் ஆப்ரிக்காவின் மில்லர் சதம் அடித்தார். இருப்பினும் அது தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு உதவவில்லை. ஐ.சி.சி., கிரிக்கெட் தொடர்களின் நாக் அவுட் சுற்று போட்டிகளில் தென்னாப்ரிக்கா அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது அந்நாட்டு ரசிகர்களிடையே மேலும் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!