மகளிர் டி20 சாம்பியன் யார்? ஆஸ்திரேலியாவுடன் தென்னாப்ரிக்கா இன்று மோதல்!

 
மகளிர் டி20 உலககோப்பை

மகளிர் டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்ரிக்காவில் நடந்துவருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், முதல் அரையிறுதியில் இந்தியாவை ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது. 2ஆவது அரையிறுதிபோட்டி நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து-தென்ஆப்ரிக்கா மோதின. 

பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை 6 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்ற தென்ஆப்ரிக்கா முதன்முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. 

மகளிர் டி20 உலககோப்பை

இந்த போட்டியில் தென்ஆப்ரிக்காவின், சப்னம் இஸ்மாயில் 128 கி.மீ. வேகத்தில் பந்துவீசி, மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்துவீசிய வீராங்கனை என்ற புதிய சாதனையை படைத்தார். 

இந்த நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன், முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள தென்ஆப்ரிக்கா பலப்பரீட்சை நடத்த உள்ளது.

மகளிர் டி20 உலககோப்பை

ஆஸ்திரேலியா அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என பலத்துடன் உள்ளது. உள்ளூர் அணியான தென்னாப்ரிக்காவும் இந்த முறை பேட்டிங், பந்துவீச்சில் சிறந்து விளங்குவதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். ஆஸ்திரேலியா 6வது முறையாகவும், தென்ஆப்ரிக்கா முதன்முறையாகவும் பட்டம் வெல்ல மல்லுக்கட்ட உள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

From around the web