அடடே... 25வது திருமண நாளை ஒட்டி மொட்டை அடித்து சுந்தர் சி வேண்டுதல்!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குநர் சுந்தர் சி. இவரது மனைவி குஷ்பு. இவர்களது 25 ம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு அன்னதானத்திற்கு நன்கொடை வழங்கினார். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முருகனுக்கு நடிகர் சுந்தர் சி முடிகாணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார். விழா பூஜைகளில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கி மரியாதை செய்யப்பட்டன. சுந்தர் சி சார்பில் இன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நன்கொடை வழங்கப்பட்டது. பழனி கோவிலில் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். சுந்தர்.சி கடைசியாக 'அரண்மனை 4' திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இதனையடுத்து சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த 'மதகதராஜா' படம் ஜனவரி மாதம் வெளியானது. பொங்கல் ரிலீசாக வெளியான இப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இதனையடுத்து சுந்தர் சி 'மூக்குத்தி அம்மன் 2' படத்தினை இயக்கவுள்ளார்.
இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில் இப்படத்தில் முக்கியமான ரோலில் நயன்தாரா நடிக்கவுள்ளார். முதல் பாகத்தினை போல் அல்லாமல் 'மூக்குத்தி அம்மன்' 2 ம் பாகத்தினை 100கோடியில் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மூக்குத்தி அம்மன். நயன்தாரா, ஆர்.ஜே. பாலாஜி நடித்திருந்தனர். போ முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. நயன்தாராவே மீண்டும் இப்படத்தில் அம்மனாக நடிக்க இருக்கும் நிலையில் இப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!