WHY BRO?... நாளை முதல் நடிகர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு... என்னென்ன வசதிகள்?!

 
விஜய் y

நாளை முதல் நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு ‘வொய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. பொதுவாக ஒரு கட்சியின் தலைவருக்கு வொய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் போது அவர்களுக்கு அந்த பாதுகாப்பில் என்னென்ன வசதிகள் என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.

கடந்த மாதத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், பிரபல நடிகருமான விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவித்து இருந்தது.

பொதுவாக 3 மாதங்களுக்கு ஒரு முறை பிரபலங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு கூட்டம் நடத்தும். அப்போது பிரபல அரசியல் தலைவர்கள், உயர் பொறுப்பில் இருப்பவர்கள், சினிமா பிரபலங்கள் என பலருக்கும் அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்தும், புதியதாக பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியவர்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும்.  

விஜய் y

அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் தவெக தலைவர் விஜய்க்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அடங்கிய Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதற்கான ஆலோசனை கூட்டமானது நடத்தப்படாமல் இருந்ததால் தற்போது வரையில் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படவில்லை.  

இந்நிலையில் நாளை மார்ச் 14ம் தேதி இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் அப்போது காவல்துறை உயர் அதிகாரி, தலைமை செயலளர், விஜய் தரப்பினர் கலந்து ஆலோசித்து விஜய் வீடு, கட்சி அலுவலகம், அவர் அடிக்கடி செல்லும் இடங்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு அளிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது. எனவே இந்த ஆலோசனையின் பேரில் நாளை மார்ச் 14ம் தேதி முதலே விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

விஜய்

X, Y, Y+, Z, Z+, SPG ஆகிய பாதுகாப்பு பிரிவுகள் உள்ளன. இதில் Y பிரிவு பாதுகாப்பில் 2 முதல் 4 துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை வீரர்கள் மற்றும் மாநில காவலர்கள் அடங்கிய 8 முதல் 11 பேர் அடங்கிய பாதுகாப்பு குழுவினர் 24*7 எனும் முறைப்படி சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு அளிப்பார்கள். தேவை ஏற்பட்டால் விஜய் வெளியில் செல்லும் போது பாதுகாப்பு பணியில் முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web