திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்?! - பிரேமலதா விளக்கம்!

 
பிரேமலதா பிரேமலதா

திமுகவுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார். தேமுதிக கட்சி ஆரம்பித்து 20 வருடங்களில் முதன்முறையாக திமுக கூட்டணியில் இணைந்தது பேசுபொருளாகி இருக்கும் நிலையில், அது குறித்து விளக்கமளித்துள்ளார்.

இது வரை அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, கடைசி நேரத்தில் திருப்பமாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட உள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டது.

பிரேமலதா

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை  சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கிறது என்ற கேள்விக்கு இன்று அதிகாரப்பூர்வ பதில் அளித்துள்ளோம். நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் விருப்பத்தின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. விஜயகாந்த் இருந்தபோதே 2016-ல் அமைய வேண்டிய கூட்டணி இது” என்றார்.

பிரேமலதா

மேலும், தொகுதிப் பங்கீடு குறித்து இரு தரப்பும் ஆலோசித்து முடிவு செய்யும் என்றும், எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார். 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்றும், மாநிலங்களவை இடம் குறித்த அறிவிப்பும் பின்னர் வெளியாகும் என்றும் கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!