"மருமகளின் கழுத்தை அறுத்துக் கொன்றது ஏன்?” - மாமியார் பகீர் வாக்குமூலம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நந்தினி (29) என்ற பெண், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமான நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவரது மாமியார் கிறிஸ்தோப்மேரி (55) மற்றும் அவரது தோழி எமிலி (52) ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.
நந்தினியின் முதல் கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இதற்கிடையில், பிசியோதெரபிஸ்ட்டான மரிய ரொசாரியோ என்பவரைக் காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளுடன் ஒரு பெண்ணைத் தனது மகன் திருமணம் செய்தது தாய் கிறிஸ்தோப்மேரிக்கு அணுவளவும் பிடிக்கவில்லை. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கைதான கிறிஸ்தோப்மேரி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், "நாங்கள் ஊரில் நல்ல வசதியுடனும் மரியாதையுடனும் வாழ்ந்தோம். இரண்டு குழந்தைகளுடன் இருந்த நந்தினி என் மகனைத் திருமணம் செய்ததால் எங்கள் குடும்பப் பெயரே கெட்டுவிட்டது. அவரை ஒழித்துக் கட்டிவிட்டு, என் மகனுக்கு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைக்கத் திட்டம் தீட்டினேன்."
கொலைத் திட்டத்தைச் செயல்படுத்தத் தனது தோழி எமிலியின் உதவியைக் கிறிஸ்தோப்மேரி நாடியுள்ளார். கடந்த 4 மாதங்களாக நந்தினியிடம் பாசமாக இருப்பது போல நடித்து அவரது நம்பிக்கையைப் பெற்றுள்ளார். டிசம்பர் 29-ம் தேதி அதிகாலை, குடும்பப் பிரச்சனை தீர ஆற்று ஓரத்தில் மாந்திரீகப் பூஜை செய்ய வேண்டும் என்று கூறி நந்தினியை அழைத்துச் சென்றுள்ளனர்.

சோழம்பட்டு மணிமுக்தாற்றின் கரையில் அமரவைத்து, நந்தினியின் கையில் எலுமிச்சை பழத்தைக் கொடுத்து "கண்ணை மூடிக்கொள்" எனக் கூறியுள்ளனர். நந்தினி கண்ணை மூடிய சமயம் பார்த்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கழுத்தை அறுத்துத் தலையைத் துண்டித்துக் கொலை செய்துள்ளனர்.
கொலை செய்த பின், யாருக்கும் தெரியாமல் தலையை ஒரு இடத்திலும், உடலை மற்றொரு இடத்திலும் ஆற்று மணலில் புதைத்துவிட்டு எதுவுமே தெரியாதது போல வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். ஆனால், தனது மனைவியைக் காணவில்லை என மரிய ரொசாரியோ அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொடூரக் கொலை வெளிச்சத்திற்கு வந்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
