இன்று போகி தினத்தில் காப்பு கட்டுவது ஏன்?! எப்படி வழிபடுவது? என்னென்ன பலன்கள்?
இன்று போகி தினத்தில் வீடுகளில் காப்பு கட்டுவார்கள். பொங்கல் தினத்திற்கு முதல்நாள் ஏன் எல்லோரும் காப்பு கட்டுகிறார்கள்? போகி என்றதால் போக்குதல். நம்மிடையே உள்ள தீய எண்ணங்களை போக்குதல் என்பது பொருள். அதே நேரம் வீட்டில் உள்ள அவசியமற்ற பொருட்களை நீக்குதல். பொங்கலுக்கு முதல் நாளான இன்று வீட்டில் இருக்கும் பழைய குப்பைகளை அப்புறப்படுத்தி அழகு செய்ய வேண்டும் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது பழமொழி. போகிப் பண்டிகை தினத்தில் போளி, வடை, பாயசம் இவைகளை இறைவனுக்கு நிவேதனம் செய்யலாம்.
அத்துடன் வீடுகளில் காப்புக் கட்டுவர். காப்புக்கட்டு என்பது அந்த காலத்தில் மூலிகைகள் அடங்கிய முதலுதவி பெட்டி. விஷக்கடி, அலர்ஜி, வயிற்றுப்போக்கு என அடிக்கடி வரும் பிரச்னைகளுக்குத் தேவையான மூலிகைகள் வீட்டில் தயாராக வைப்பது தான் காப்பு கட்டு.

வீட்டின் நிலைவாசலில் காப்புக் கட்டும் போது அதில் ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை, மாவிலை, தும்பை, பிரண்டை போன்ற மூலிகைகளை வைத்து கட்டுவர். காலப்போக்கில் பிரண்டை, தும்பை போன்ற மூலிகைகளை விட்டு விட்டனர். அறிவியல் ரீதியாக ஜனவரி மாதம் என்பது மழைக்காலம் முடிந்து குளிர் அதிகரிக்கும் காலம் என்பதால் நோய்க்கிருமிகள் பரவும் ஆபத்து அதிகம் . அதனால் வீடு முழுக்க மஞ்சள், சாணம் தெளித்து சாம்பிராணி, தூபம் போட வேண்டும்.
பச்சரிசியில் மாக்கோலம் இ்ட்டு வீட்டு வாசலில் காப்பு கட்டலாம். இந்த மூலிகை கொத்தில் கட்டாயம் மாவிலை, நொச்சி, வேம்பு, ஆவாரம், மஞ்சள் கொத்து, தும்பை, பிரண்டை, துளசி இருப்பது சிறப்பு.

நமது முன்னோர்கள் அனைத்தையும் அலசி ஆய்வு செய்தே கடைப்பிடிக்க தொடங்கினர். இந்நாள் பூகோளத்தின் அடிப்டையிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும் அதாவது சூரியன் மகர ரேகைக்கு மாறும் முதல் நாள் இது. இதன் மூலம் குளிர்காலம் முடிவுக்கு வந்து வெப்ப காலம் தொடங்க போகிறது என்பதை உணர்த்தும் நாள். இதனால் நல்ல நேரம் பார்த்து காப்பு கட்டுவர்.
இந்த காப்புக்கள் வீடுகளில் நுழைவாயில், சமையல் கூடம், மற்ற அறைகளிலும் சொருகலாம். இந்த காப்பு கட்டில் உள்ள அனைத்தும் மூலிகைகளே. ஆவரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ என்பது சித்தர் பாடல் இந்த மூலிகைகளை நாம் காப்பாக கட்டுவதன் மூலம் திடீரென எதிர்பாராமல் உருவாகும் நோய்களான வயிற்று போக்கு, ஒவ்வாமை, விஷம் போன்றவைகளிலிருந்து இப்படியொரு பழக்கம் உருவாக்கப்பட்டது. நமது முன்னோர்களின் செயலின் பயன், மூலம் அறிந்து கடைப்பிடிப்போம். நம் வாழ்வை வளமாக்குவோம்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!
