யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு ஏன் எரிச்சல்?... எடப்பாடி ஆவேசம்!

தமிழ்நாட்டில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்க செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வகையில் இன்று அதிமுக உறுப்பினர்கள் தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். முன்னதாக தமிழக சட்டப்பேரவை கூடியதும் அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். 3 அமைச்சர்கள் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்ததை கண்டித்து பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், அதிமுக சார்பில் பேரவையில் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி தரமறுத்ததை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்தது என கூறினார்.
இதனை தொடர்ந்து பாஜகவுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணியில் அங்கம் வகிப்போம் எனக் கூறியுள்ளோம். கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை; நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு ஏன் எரிச்சல்? திமுகவுக்கு பயம். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என அமித்ஷாவும் கூறவில்லை. டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என அமித்ஷா கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!