கொலையாளிகளை சுட்டுப் பிடித்தது ஏன்? போலீசார் பரபரப்பு விளக்கம்!

 
கோவை

கோவையில் நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் காலை அடிதடி, மோதல் வழக்கில் கோவை நீதிமன்றத்தில் ஜாமீன்  கையெழுத்து போட்டுவிட்டு, நண்பர் மனோஜுடன், கோகுல் என்ற இளைஞர் சென்றுள்ளார்.

அப்போது, ஒரு கும்பல் இடைமறித்து அரிவாளால் வெட்டியதில் அதே இடத்தில் கோகுல் உயிரிழந்தார். மனோஜ் காயத்துடன் தப்பினார். கொலையாளிகள் தப்பிச்சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க போலீசார் களத்தில் இறங்கினர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.

கொலையாளிகளில் ஒருவரது செல்போன் சிக்னல் குன்னூர் பகுதியில் காட்டியது. இதனையடுத்து போலீசார் அங்கே சென்றபோது அவர்கள் வெவ்வேறு இடங்களுக்கு சென்றது தெரியவந்தது. எனினும் கோத்தகிரியில் அவர்களை போலீசார் சுற்றிவளைத்தனர். அந்த கொலை கும்பலில் இருந்த 7 பேரையும் போலீசார் மடக்கிபிடித்தனர்.

கோவை

விசாரணையில், அவர்கள் கோவையை சேர்ந்த ஜோஸ்வா (23), கவுதம் (24), ஹரி கவுதம் (25), பரணி சவுந்தர் (20), அருண்குமார் (21), சூர்யா (23), டேனியல் (27) என்பது தெரியவந்தது. 7 பேரையும் போலீசார் கைது  செய்தனர். இவர்களை வேனில் ஏற்றி நேற்று மாலை கோவை அழைத்து  வந்துகொண்டிருந்தனர். 

மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி அருகே வாகனத்தில் வரும்போது ஜோஸ்வா மற்றும் கவுதம் ஆகியோர் தங்களுக்கு வாந்தி, மயக்கம் வருகிறது என போலீசாரிடம் கூறினர்.  உடனே வாந்தி எடுப்பதற்காக வாகனத்தை நிறுத்தினர். அந்த சமயத்தில், ஜோஸ்வா, கவுதம் ஆகிய இருவரும் தப்பி ஓட முயன்றனர். உடனே பாதுகாப்பாக வந்த போலீசார் எச்சரித்தனர். ஆனாலும், அவர்கள் தப்பி ஓடிச்சென்று ஏற்கனவே ஒரு இடத்தில் பதுக்கிவைத்திருந்த அரிவாளை எடுத்து போலீசாரை  ஜோஸ்வா மிரட்டினார். மேலும் அரிவாளால் வீசியதில் சிறப்பு உதவி ஆய்வாளர் யூசுப்பின் வலது கையில் காயம் ஏற்பட்டது.'

கோவை

இதனையடுத்து போலீசார் ஜோஸ்வாவின் வலது காலில் முட்டுக்கு கீழ் இரண்டு இடங்களில் சுட்டார். மேலும், கவுதமின் இடது காலில் முட்டுக்கு அருகே சுட்டார். இதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் விழுந்தனர். இதையடுத்து இருவரையும் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். மற்ற 5 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web