நான் ஏன் இந்தியில் பேசவேண்டும்... வட இந்திய பயணியை ஓடவிட்ட ஆட்டோ ஓட்டுநர்... வைரலாகும் வீடியோ!

 
ஆட்டோ

இந்தியாவில் பல மாநிலங்களில் மொழி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்பது தான் பாஜகவின் அடிப்படை கொள்கைகளாக உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சியில் வந்தது முதலே இந்தி திணிப்பு அதிகரித்து வருவதாக அரசியல் கட்சியினர், அரசியல் நோக்கர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநரிடம், வட இந்திய பெண் பயணி  ஒருவர் இந்தியில் பேசியதால் எழுந்த வாக்குவாதம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பெங்களூருவில் பணிபுரிந்து வரும் வடஇந்திய பெண் ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது அந்த வட இந்திய பெண் பயணி பெங்களூரு ஆட்டோ டிரைவரிடம் கன்னடா மொழியில் பேசாமல் இந்தி மொழியில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் கன்னடா மொழியில் பேசும்படி கூறியுள்ளார். 

ஆனால், அந்த பெண் பயணி தொடர்ந்து இந்தி மொழியில் பேசவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

M;lnlh

ஆட்டோ ஓட்டுநர்: நான் ஏன் இந்தியில் பேச வேண்டும்?
வட இந்திய பெண் பயணி: சரி... சரி... சரி...
ஆட்டோ ஓட்டுநர்: இது கர்நாடகா. நீங்கள் கன்னட மொழியில் தான் பேசவேண்டும். நீங்கள் வட இந்திய பிச்சைக்காரர்கள்.
வட இந்திய பெண் பயணி: ஏன். நாங்கள் கன்னட மொழியில் பேசமாட்டோம்.
ஆட்டோ ஓட்டுநர்: இது உங்கள் நிலம் அல்ல... எங்கள் நிலம். நீங்கள் கன்னட மொழியில் தான் பேச வேண்டும். நான் ஏன் இந்தியில் பேச வேண்டும், என்றார்.

இந்த உரையாடல் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web