’நாம் ஏன் இந்தியாவுக்கு நிதி கொடுக்கணும்?’.. பொங்கி எழுந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

 
மோடி ட்ரம்ப்

அமெரிக்காவில் புதிதாக உருவாக்கப்பட்ட டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் DOGE அமைப்பு, ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா நிறுவனர் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் தலைமையில் செயல்படுகிறது. தேவையற்ற அரசாங்க செலவினங்களைக் கண்டறிந்து நிறுத்த இந்தத் துறை செயல்பட்டு வருகிறது. கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் எலான் மஸ்க்கிற்கு எதிராக நாட்டில் மக்கள் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர்.

மறுபுறம், மற்ற நாடுகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிதி உதவியையும் இந்தத் துறை ரத்து செய்கிறது. இந்த சூழ்நிலையில், இந்தியத் தேர்தல்களில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க வழங்க திட்டமிடப்பட்டிருந்த 21 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 182 கோடி) நிதி உதவியை அமெரிக்க அரசாங்கத் திறன் துறை (DOGE) ரத்து செய்துள்ளது.

இது தொடர்பாக, 'அமெரிக்க மக்களின் வரிப் பணம் பல நாடுகளில் பல்வேறு திட்டங்களுக்கு செலவிடப்படவிருந்த நிலையில், அந்தச் செலவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியத் தேர்தல்களில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்க திட்டமிட்டிருந்த 21 மில்லியன் டாலர் நிதி உதவியும் இந்த செலவுகளில் அடங்கும்.' இது தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரசுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. "இந்தியத் தேர்தல்களில் அமெரிக்காவின் பங்கு என்ன" என்று பாஜக கேள்வி எழுப்பியது, மேலும் இதற்கு காங்கிரஸ் கட்சியைக் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்தது.

இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "நாம் ஏன் இந்தியாவுக்கு 21 மில்லியன் டாலர் (ரூபாய் 1.82 லட்சம் கோடி) கொடுக்க வேண்டும்" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, அவர் கூறுகையில், "நாம் ஏன் இந்தியாவுக்கு 21 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும்? அவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது. அமெரிக்காவை பொறுத்தவரை உலகிலேயே அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

மோடி ட்ரம்ப்

இந்தியப் பொருளாதாரமும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. அங்கு நமது வரிகள் அதிகமாக இருப்பதால், நாங்கள் அங்கு செல்வது அரிது. பிரதமர் நரேந்திர மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க 21 மில்லியன் டாலர்களை ஏன் கொடுக்க வேண்டும்?" என்று அவர் அதில் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web