கணவனின் தீராத குடிப்பழக்கம்.... மனைவி, 2 குழந்தைகள் கிணற்றில் குதித்து தற்கொலை!
தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தண்டியன்குளம் மலை கிராமத்தை சேர்ந்த ஜெயப்பெருமாள், அடிக்கடி மது குடித்து வீட்டில் மனைவியிடம் சண்டையிடும் பழக்கம் கொண்டவர். நேற்று இரவும் அதேபோல் நிகழ்ந்தது. மது குடித்துவிட்டு வந்த ஜெயப்பெருமாளுடன் சண்டையிட்டதால், மனமுடைந்த மனைவி தனலட்சுமி, தனது இரண்டு குழந்தைகளான தேவா (7) மற்றும் நீதி (2) இருவரையும் கைகளில் தூக்கி அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார்.

சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தகவல் வழங்கியதன்படி வருசநாடு காவல்துறையினர், தீயணைப்பு துறையின் உதவியுடன் மூவர் உடல்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரின் மதுப்பழக்கம் காரணமாக ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மலை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
