கணவரைக் கத்தியால் குத்தி கொலை செய்து கால்வாயில் வீசிய மனைவி கைது... பெரும் பரபரப்பு!
சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் கழிவுநீர் கால்வாயில் ஆண் சடலம் கிடந்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் ஒரு பெண் கோணிப்பையை இழுத்து வந்து கால்வாயில் வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது.

இந்த விசாரணையில் அந்த பெண் அண்ணாநகர் கிழக்கு அன்னை சத்யா நகர் பகுதியில் வசித்து வருபவர் அம்பிகா (57) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில், கால்வாயில் வீசப்பட்ட சடலம் அவரது கணவர் சந்தானம் (60) என்பதும் தெரியவந்தது.

சந்தானம் தினமும் மதுபோதையில் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த அம்பிகா, வீட்டில் இருந்த கத்தியால் சந்தானத்தை குத்திக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் சடலத்தை சில நாட்கள் வீட்டில் வைத்திருந்த அவர், துர்நாற்றம் வீசியதால் கோணி பையில் கட்டி கால்வாயில் வீசியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் அம்பிகாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
