பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம்... மனைவி, மாமனாரை சுத்தியலால் அடித்து டீசல் ஊற்றி எரித்து கொலை!

 
தெலங்கானா தெலங்கானா

தெலங்கானா மாநிலம் கடிபிகொண்டா கிராமத்தில் வரதட்சணைப் பேய்க்கு ஒரு தந்தையும், மகளும் பலியான சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. ஆட்டோ ஓட்டுநரான ராஜசேகர் (51), தனது மகள் ராஜஸ்ரீயை (23)   2023ல் ஐதராபாத்தில் வேலை செய்யும் பிரவீண் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தார். திருமணத்தின் போது 3 லட்சம் ரூபாய் வரதட்சணை மற்றும் சீர் வரிசைகள் வழங்கப்பட்ட போதிலும், சமீபத்தில் ராஜஸ்ரீக்கு இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்ததால், கூடுதல் வரதட்சணை கேட்டு பிரவீண் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளார்.

ஆம்புலன்ஸ்

கை முறிவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த ராஜஸ்ரீ, தனது குழந்தைக்கு அன்னப்பிரசன்ன பூஜை செய்வதற்காகத் தந்தை வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு வந்த பிரவீண், கடந்த வாரம் முதல் மீண்டும் வரதட்சணை கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று அதிகாலை ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற பிரவீண், வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்துத் தூங்கிக் கொண்டிருந்த மனைவி ராஜஸ்ரீ மற்றும் மாமனார் ராஜசேகர் ஆகியோரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையிலும் ஆத்திரம் தீராத அந்தப் பாவி, அவர்கள் மீது டீசலை ஊற்றித் தீ வைத்துள்ளார். இதில் உடல் கருகி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரபிரதேச போலீஸ்

கொலையை மறைக்கத் தீ விபத்து என நாடகமாடிய பிரவீண், ராஜஸ்ரீயின் உறவினர்களுக்குத் தவறான தகவல் அளித்துள்ளார். ஆனால், உயிரிழந்தவர்களின் நெற்றியில் இருந்த காயங்களும், அருகில் கிடந்த சுத்தியலும் ராஜஸ்ரீயின் தங்கை தேஜஸ்வினிக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தின. போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அறிந்து குழந்தைகளுடன் தப்ப முயன்ற பிரவீணை, அக்கம் பக்கத்தினர் பிடித்துப் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், வரதட்சணைக்காகத் தான் செய்த கொடூரக் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். தற்போது போலீசார் அவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!