கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை அடித்தே கொலை செய்த மனைவி!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆலிவலம் கீராந்தி அடப்பாறிலிருந்து பிரிந்து செல்லும் வாய்க்காலில் 2ம் தேதி தலையில் ரத்தக் காயத்துடன் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இறந்தவர் பொன்னிரையை சேர்ந்த சுப்பிரமணியன் (50) என்பவர். ஓட்டல் நடத்தி வந்த இவர் நஷ்டம் காரணமாக ஓட்டலை மூடி கூலி வேலைக்கு சென்றார்.

சுப்பிரமணியனுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இரண்டாவது மனைவி இந்திராவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆய்வு செய்த போலீசாரின் தகவலின்படி, இந்திரா கள்ளக்காதலன் சந்திரசேகருடன் இணைந்து சுப்பிரமணியனை அடித்து கொன்று வாய்க்காலில் வீசியது தெரியவந்தது. சுப்பிரமணியனுக்கு தெரிய வந்ததால் தம்பதியில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதன்படி 2ம் தேதி சந்திரசேகர், சுப்பிரமணியனுக்கு மது கொடுத்து, வாய்க்கால் அருகே அவரை தலை மற்றும் பல இடங்களில் தாக்கி கொலை செய்தார். போலீசார் வழக்கை பதிவு செய்து சந்திரசேகர் மற்றும் இந்திராவை கைது செய்தனர். இருவரையும் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். சந்திரசேகருக்கு மனைவி, இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
