3 நாட்கள் பழைய சாம்பாரை கணவனுக்கு ஊற்றியதால் தகராறு ... பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து மனைவி தற்கொலை!

 
kavya kavya

பெங்களூருவில் வசித்து வருபவர் 27 வயது காவ்யா. இவருடைய கணவர்  ரங்கசாமி. இருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.  இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் மார்ச் 5ம் தேதி வியாழக்கிழமை 3 நாள் பழைய சாம்பாரை பரிமாறியதாக தெரிகிறது.இச்சம்பவம் குறித்து   கணவன்–மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.  

இந்த வாக்குவாதத்தின் போது ரங்கசாமி மனைவி காவ்யாவை மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். சிறிது நேரம் கழித்து மனைவியை தாக்கத் தொடங்கியுள்ளார். கணவர் மோசமாக திட்டி அடித்து விட்டு வெளியே சென்றதும்  மனமுடைந்த காவ்யா, வீட்டில் விவசாய பயன்பாட்டிற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.  

சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவ்யாவை  உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே காவ்யா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!