பைக், கிரேன் மீது மோதியதில் சக்கரத்தில் சிக்கி மனைவி பலி... கணவன் கண் முன்னே சோகம்...!!

 
கிரேன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  முறையூரில் வசித்து வருபவர்  நாச்சியப்பன். இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய  மனைவி வளர்மதி, சென்னையில்   அஞ்சலகத்தில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறை நாட்களுக்கு சொந்த ஊர் திரும்பி விடுவார். அதே போல் சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.  இன்று காலை தனது கணவருடன் பைக்கில் காரைக்குடிக்கு சென்றிருந்தார்.  

விபத்து

இருவரும் ஆவுடைபொய்கை அருகே சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் லேசான மழை பெய்தது.  நாச்சியப்பன் இருசக்கர வாகனத்தை தங்கம் திருமண மண்டபம் அருகே நிறுத்திவிட்டு  இருவரும் மழைக்காக அங்கு சிறிது நேரம் ஒதுங்கி நின்றனர்.மழை நின்ற பின்பு இருவரும்   திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது, அந்த சாலையில் வேகமாக வந்த கிரேன் வாகனம், இருசக்கர வாகனம் மீது உரசியது.

ஆம்புலன்ஸ்

நிலை தடுமாறிய நாச்சியப்பன் கீழே விழுந்தார். பின்னால் அமர்ந்திருந்த  வளர்மதி வலதுபுறமாக சரிந்து விழுந்ததில், கிரேன் சக்கரம் ஏறி இறங்கி உடல் நசுங்கி பலியானார். கணவர் கண்முன்னே வளர்மதி பலியானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  தகவல் அளிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்   வளர்மதியின் சடலத்தை மீட்டு, காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு   வருகின்றனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web