10 நிமிஷத்திற்குள் பயங்கரம்... கணவன் காய்கறி கடைக்கு போனதும் மனைவி தூக்கிட்டு தற்கொலை!

 
கணவன்
 

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட சிறிய வாக்குவாதம், சோகமான முடிவுக்கு வழிவகுத்துள்ளது. சம்பவத்தன்று கணவன் காய்கறி வாங்க வெளியே சென்று, 10 நிமிடங்களில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது.

நீண்ட நேரம் கதவைத் தட்டியும், செல்போனில் அழைத்தும் மனைவி பதிலளிக்கவில்லை. பதற்றமடைந்த கணவன், மனைவிக்கு ஆபத்து நேர்ந்திருக்கலாம் என காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு அந்தப் பெண் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் இருந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரிய வந்தது. “காய்கறி வாங்கத்தான் சென்றேன்” என கணவன் கதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!