காரை ஏற்றி கணவரை கொலை செய்த மனைவி... கள்ளக்காதலனுடன் ஊரைவிட்டு ஓட்டம்...!

 
ரூபினி

கடலூர் மாவட்டம்  கனகசபைநகர் பகுதியில் வசித்து வருபவர்   சம்பத். இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து  வந்தார். இவரது மனைவி கிரண்ரூபினி. இவருக்கும் கன்னியாகுமரியில் வசித்து வரும்  ராஜேசுக்கும்   இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த கிரண்ரூபிணியின்  கணவர்   சம்பத்  மனைவியை கண்டித்துள்ளார்.  

ரூபினி

கள்ளக்காதலன் ராஜேஷ்  தனது நண்பரான  அமீர்பாஷாவுடன் இணைந்து 2013ல்  சம்பத்தை காரை ஏற்றி கொலை செய்தனர். இந்த வழக்கு முதலில்  விபத்தாக பதிவு செய்யப்பட்டது. இது குறித்து நடத்தப்பட்ட தீவிர   விசாரணையில் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி கிரண்ரூபினி, அவரது கள்ளக்காதலன் ராஜேஷ், கார் ஓட்டுநர் அமீர்பாஷா  மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  

ரூபினி

வழக்கு விசாரணையில்  ஒரு சில முறை மட்டுமே ஆஜரான குற்றவாளிகள் அதன் பின்னர் தலைமறைவாகி விட்டனர். இவர்களை   பிடிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து இருந்தது. இதன்படி  தனிப்படை மூலம் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள்  3 மாதங்களுக்கு பிறகு  கேரளாவில் வசித்து வந்தது கண்டறியப்பட்டது.  தனிப்படை போலீசார் கிரண்ரூபினி மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!