₹2 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு கணவரைக் கொன்ற மனைவி.. கள்ளக்காதலால் விபரீதம்!

 
கொலை கள்ளக்காதல்

தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் போர்கான் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது உறவினர்களை அதிர்ச்ச்சியடைய செய்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் உயிரிழந்தது மாரடைப்பு காரணமாக அல்ல என்றும், இது திட்டமிட்ட கொலை என்பதையும் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர்.

தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்த சவுமியாவிற்கும், அதே பள்ளியின் பி.டி மாஸ்டர் திலீப்பிற்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதலே இந்த விபரீதத்திற்கு ஆரம்பப்புள்ளியாக அமைந்தது. தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் ரமேஷை ஒழித்துக்கட்ட சவுமியா திட்டமிட்டார். அதே சமயம், ரமேஷ் பெயரில் இருந்த ₹2 கோடி ஆயுள் காப்பீட்டுத் தொகையும் கிடைத்தால், திலீப்புடன் சொகுசாக வாழலாம் என அவர் கணக்கு போட்டுள்ளார்.

பள்ளி மானவி தற்கொலை

இதன் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரமேஷ் சென்ற பைக் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்தினர். இதில் ரமேஷ் உயிர் தப்பினாலும், அவரது கை எலும்பு முறிந்தது. அதன் பின்னர் கடந்த டிசம்பர் 19ம் தேதி ரமேஷிற்கு அதிகளவு தூக்க மாத்திரைகளைக் கொடுத்து, அவர் மயங்கியதும் கள்ளக்காதலன் மற்றும் ரவுடி கும்பலை வைத்துத் துணியால் கழுத்தை இறுக்கிக் கொன்றுள்ளனர். மறுநாள் ரமேஷ் மாரடைப்பால் இறந்து விட்டதாகக் கூறி சவுமியா அழுது நாடகமாடினார். ரமேஷின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ரமேஷின் மரணம் குறித்து வெளிநாட்டில் இருந்த ரமேஷின் தம்பி கோதாரிக்கு அனுப்பப்பட்ட இறுதிச்சடங்குப் புகைப் படங்களில், ரமேஷின் கழுத்தில் காயங்கள் இருப்பதை அவர் கவனித்தார். இதுவே காவல் நிலையத்தில் புகாரளிப்பதற்கு காரணமாக அமைந்தது.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

அதன் பின்னர் தாசில்தார் முன்னிலையில் ரமேஷின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கொலை செய்யப்பட்டு ரமேஷ் இறந்தது உறுதியானது. இதனையடுத்து சவுமியா, திலீப் மற்றும் ரவுடி கும்பலைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!