கல்யாணமாகி 10 நாள்... மனைவியை தலையணையை அமுக்கி கொலை செய்து கணவர் தற்கொலை!

 
யுவஸ்ரீ
 

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளை தளபதி தெருவில், புதிதாக திருமணம் செய்த தம்பதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணினி மென்பொறியாளரான விஜய் (25), தனது அலுவலக சக ஊழியரான யுவஸ்ரீ (21)யை கடந்த டிசம்பர் 13-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

ஆம்புலன்ஸ்

செவ்வாய்க்கிழமை யுவஸ்ரீயின் தங்கை வீட்டிற்கு சென்ற போது, வீடு பூட்டியிருந்தது. பலமுறை கதவைத் தட்டியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் வந்த குன்றத்தூர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, யுவஸ்ரீ உயிரிழந்த நிலையில் கிடந்தார். விஜய் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தார்.

போலீஸ்

முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக யுவஸ்ரீயை தலையணையால் மூச்சுத் திணறடித்து கொன்றுவிட்டு, விஜய் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!