கொடூரம்... கூலிப்படையை ஏவி தெருநாயை கொன்ற ராணுவ அதிகாரியின் மனைவி!

 
நாய்

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. சண்டிமந்திர் கன்டோன்மென்ட் பகுதியில் தெரு நாய் ஒன்று வசித்து வந்தது. கடந்த 9 ஆண்டுகளாக அந்த நாய் அப்பகுதி மக்களால் செல்லமாக வளர்க்கப்பட்டு வந்தது. அது அந்தப் பகுதிக்கு ஒரு குடும்ப உறுப்பினர் போல இருந்தது. இந்த நிலையில், அந்த நாய் கொலை செய்யப்பட்ட பயங்கரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

டிசம்பர் 5 ஆம் தேதி அந்த நாயின் உடல் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ராணுவ அதிகாரியின் மனைவி ஒருவரின் கொடூரச் செயல் அம்பலமானது. தேப்மித்ரா அபிஷேக் பால் என்பவரின் செல்ல நாயை இந்தக் காலில்லாத நாய் குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தேப்மித்ரா, இரண்டு கூலி ஆட்களை அமர்த்தியுள்ளார்.

அந்த நாய் கூலி ஆட்களால் கடத்திச் செல்லப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது தெரிய வந்தது. விலங்குகளைக் கொல்வது இந்தியாவில் ஒரு கடுமையான குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். இந்தக் கொடூரச் செயல் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!