அடிக்கடி செல்போனில் பேசிய மனைவி... வெறித்தனமாய் தாக்கிய கணவர் கைது!

தூத்துக்குடி திரேஸ்புரம் சங்குகுளி காலனியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் மகன் எட்வர்ட் (30), இவர் மேட்டுப்பட்டியை சேர்ந்த சிலிசியா (25) என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிலிசியா அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டே இருப்பாராம். இதை அவரது கணவர் பல தடவை கண்டித்து உள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 12 மணி வரை செல்போனில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த எட்வர்ட் ஆத்திரமடைந்து, செல்போனை உடைத்து மனைவியை சரமாரியாக தாக்கினாராம். இதில் காயமடைந்தவர் சிலிசியா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எட்வர்டை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!