கல்யாணமாகி 45 நாள் தான்... காதலனுடன் ஓடிப்போன மனைவி... கணவன் தற்கொலை!
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம், கும்மனூர் கிராமத்தை சேர்ந்த 32 வயது விவசாயி ஹரீஷ், கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தொடக்கத்தில் இல்லற வாழ்க்கை அமைதியாக இருந்தாலும், மனைவியின் பழைய காதலர் தொடர்பில் தொடர்ந்த இருப்பு தெரியவந்ததும் ஹரீஷ் மனம் உடைந்தார்.

சமீபத்தில் அவரது மனைவி காதலனுடன் ஓடிப் போனதால், விரக்தியில் ஹரீஷ் தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். சம்பவத்தை அறிந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். தாவணகெரே புறநகர் போலீசார் விரைந்து விசாரணை நடத்தி, ஹரீஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

ஹரீஷ் தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் எழுதி விட்டார். அதில் மனைவி, மாமியார், மாமனார், காதலன் ஆகியோர் தனது இறப்புக்குக் காரணம் என்றும், பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் மிரட்டலால் மனம் பாதிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. போலீசார் கடிதத்தை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 45 நாட்களில் இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
