வெளிநாட்டு மதுபானங்கள், போதை விருந்து, மனைவி மாற்றம்… அஞ்சுகிராமம் ரிசார்ட்டில் அதிர்ச்சி !
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே சொகுசு ரிசார்ட்டில் விடிய விடிய நடந்த போதைவிருந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்ரக போதைப் பொருட்கள், வெளிநாட்டு மதுபானங்கள் மட்டுமல்லாமல், போதையில் மனைவிகளை மாற்றி உல்லாசத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவலும் விசாரணையில் வெளியானது.

ரகசிய தகவலின் அடிப்படையில் எஸ்பி ஸ்டாலின் தலைமையிலான போலீசார் நள்ளிரவில் ரிசார்ட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர். தொடர்ந்து நடந்த விசாரணையில் ஏற்பாட்டாளர் கோகுல் கிருஷ்ணன், அவரது மனைவி சவுமி, தம்பி கோவிந்த் கிருஷ்ணன், கேரளம்–கோவா–பெங்களூரு உள்ளிட்ட இடங்களை சேர்ந்த 5 பேருடன் ரிசார்ட் உரிமையாளர் ராஜூ உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது சிறையில் உள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னால் உள்ள சில விஐபிக்கள் குறித்து போலீசார் ரகசியமாக தகவல் சேகரித்து வருகின்றனர்.
கல்ச்சுரல் பிரோக்ராம் என்ற பெயரில் பல ரிசார்ட்டுகளில் போதை விருந்துகள் நடத்தி, வெளிநாட்டு மதுகள், எம்டிஎம்ஏ, எல்எஸ்டி உள்ளிட்ட உயர்தர போதைப் பொருட்களை சப்ளை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இவ்விழாக்களில் மனைவிகளை மாற்றி உல்லாசத்தில் ஈடுபடும் நிகழ்ச்சிகளும் நடந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நுழைவு கட்டணம் ரூ.1,000 – ரூ.2,000, உள்ளே ஒவ்வொரு செயலுக்கும் தனி கட்டணம் வசூல் செய்து, ஒரு நிகழ்ச்சியில் ரூ.25–50 லட்சம் வரை லாபம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.

சோதனையில் 2 சொகுசு கார்கள், 102 வெளிநாட்டு மதுபாட்டில்கள், கஞ்சா, எம்டிஎம்ஏ, எல்எஸ்டி, கொகைன் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வின் பின்னால் உள்ள பெரிய நெட்வொர்க் மற்றும் விஐபி தொடர்புகளை போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதால், கன்னியாகுமரியில் அதிர்வு நிலவுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
