மனைவி பாம்பு கடித்து கவலைக்கிடம்... கணவர் விஷம் குடித்து தற்கொலை!
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே கொல்லாபுரம் தோப்புத்தெருவை சேர்ந்த நாகராஜன் (60), மனைவி லலிதா (54) ஆகியோர் கூலி தொழிலில் ஈடுபட்டு வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் வயலுக்கு வேலைக்கு சென்ற லலிதாவை பாம்பு கடித்ததால், அவர் உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மனைவியைப் பார்க்க மருத்துவமனைக்கு சென்ற நாகராஜன், லலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அறிந்து வருத்தத்தில் மனம் தளர்ந்தார். மனைவி உயிரிழந்து விடுவார் என்ற எண்ணத்தில், வீட்டிற்கு திரும்பிய அவர் வயலில் பயன்படுத்தும் பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். கடுமையான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நாகராஜன், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேவேளை, பாம்பு கடித்து சிகிச்சையில் இருந்த லலிதா தற்போது நலம்பெற்று வீடு திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
