சர்ச்சை வீடியோ !! முகத்தில் மூவர்ண கொடி வரைந்த பெண்ணுக்கு பொற்கோயிலில் அனுமதி மறுப்பு?
பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவில் சர்வதேச அளவில் புகழ்பெற்றது. சீக்கியர்களின் புனித தலமாக உள்ள பொற்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பஞ்சாப் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும் மக்கள் சென்று வழிபடுகின்றனர்.
இந்த நிலையில் இந்த கோவிலுக்குள் இளம்பெண் ஒருவர் அனுமதிக்கப்படவில்லை என்ற விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
This is shocking! Women denied entry inside Golden Temple because she has Indian flag tatoo on her face. This khalistani should be immediately arrested. Just ignoring them is not the solution because their ego is getting fatter and fatter every day. pic.twitter.com/8h2CKaG5OO
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) April 17, 2023
அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர், ஆண் ஒருவருடன் கோவிலுக்கு வருகிறார். அந்த பெண் தனது முகத்தில் மூவர்ண கொடியை வரைந்துள்ளார். அந்த பெண் கோவிலுக்குள் நுழைவதை பார்த்து அங்கு பணிபுரியும் காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். அதற்கு அந்த நபர் பெண்ணின் முகத்தில் வரைந்திருக்கும் மூவர்ண கொடியை சுட்டிக்காட்டி, “இது பஞ்சாப், இந்தியா அல்ல” என்று கூறுகிறார்.

தொடர்ந்து அந்த பெண்ணுடன் வந்த நபர், கோவில் பாதுகாவலர்களிடம் வாக்குவாதம் செய்தார். முட்டாள்தனமாக பேசுகிறீர்கள் என்று கூறுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும் கோவில் ஊழியர்களுக்க எதிர்ப்பும் எழுந்தது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக கோவிலை நிர்வகிக்கும் ஷிரோமணி பிரபந்தக் கமிட்டி விளக்கம் அளித்துள்ளது. பெண் முகத்தில் வரைந்திருந்த மூவர்ண கொடியில் அசோக சக்கரம் இல்லை. எனவே அது அரசியல் கட்சிக்கொடி எனக் கருதி அந்த பெண்ணுக்கு அனுமதி வழங்காமல் இருந்திருக்கலாம் என்றார். மேலும் மீண்டும் இதுபோன்று நடைபெறாமல் பாதுகாத்து கொள்வதாகவும், அந்த பெண்ணுக்கு நடந்ததற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
